பெரிய விலைக்கு போன ஆரம்பம்!

பெரிய விலைக்கு போன ஆரம்பம்!

செய்திகள் 23-Oct-2013 2:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'தல’ அஜித், இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியியுள்ள, ‘ஆரம்பம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்க, படத்தை வருகிற 31-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பட விநியோகம் சம்பந்தமான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்க, படத்தின் செங்கல்பட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான இராம.நாராயணன் பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். ‘பில்லா’ படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்த்தன், அஜித், நயன்தாரா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முதலானோர் மீண்டும் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ள ‘ஆரம்பம்’ ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;