கலெக்‌ஷனில் அசத்திய ‘ராஜா ராணி’

வசூல் கலெக்‌ஷனில் அசத்திய  ‘ராஜா ராணி’

செய்திகள் 23-Oct-2013 11:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் ‘ராஜா ராணி’யும் ஒன்று! அட்லி இயக்கத்தில், ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா முதலானோர் நடித்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை புரிந்துள்ளதாக ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இந்தப் படம் வெளியாகி இருபத்தி ஐந்து நாட்களை கடந்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க, 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இந்த ஆண்டு (2013) வெளியாகி வசூல் சாதனை படைத்த படங்களின் பட்டியலில், ’ராஜா ராணி’ மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;