ஹாலிவுட்டில் ஸ்ரீதேவி!

ஹாலிவுட்டில் ஸ்ரீதேவி!

செய்திகள் 22-Oct-2013 12:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமல்லாமல், ஹிந்திப் படங்களிலும் நடித்து இந்தியாவின் முன்னணி நடிகையருள் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஸ்ரீதேவி. சமீபத்தில், ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற திரைப்படத்தில் ஆங்கிலத்தில் பேச கஷ்டப்படும் இல்லத்தரசியாக நடித்து கலக்கிய ஸ்ரீதேவி, அடுத்து ஒரு படத்தில் முழுக்க முழுக்க ஆங்கிலம் பேச இருக்கிறார்.

ஹாலிவுட்டில் தயாராகும் ‘கௌபாய் அன்ட் இந்தியன்ஸ்’ என்ற ஆங்கில படத்தில் தான் ஸ்ரீதேவி ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோயின் மெரிஸ் ஸ்ட்ரீப்புடன் இணைந்து நடித்து ஆங்கிலம் பேச இருக்கிறார். ஸ்ரீதேவி முதன் முதலாக நடிக்கும் இந்த ஆங்கில படத்தை எமி ஃபோர்ட் இயக்குகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவி நடிப்பது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாம் - TRAILER


;