ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ஹாலிவுட் படம்!

ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ஹாலிவுட் படம்!

செய்திகள் 22-Oct-2013 11:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மைக்கேல் ஹாப்ஸ்ட்ரோம் இயக்கத்தில் சில்வஸ்டர் ஸ்டாலனும், அர்னால்டும் இணைந்து நடித்துள்ள ஆங்கில படம் ‘எஸ்கேப் ப்ளான்’. எக்ஸ்பெண்டபிள்ஸ் சீரிஸுக்கு பிறகு அர்னால்டும், ஸ்டாலனும் இணைந்து நடித்துள்ள இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி, வசூல் வேட்டை நடத்தி வர, இந்தப் படம் படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆக இருக்கிறது. ஹிந்தி ரீ-மேக்கில் ஜான்ஆப்ரகாம், அக்‌ஷயகுமார் இணைந்து கலக்க இருக்கிறார்கள். நவீன வசதிகள் கொண்ட ஒரு ஜெயிலில் இருந்து தப்பிக்கும் இரண்டு குற்றவாளிகள் பற்றிய கதை என்பதால, இந்த கதை எல்லா மொழிக்கும் பொருந்தும். ஹிந்தி ரீ-மேக்கின் டைட்டில், இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;