கவியரசர் கண்ணதாசன் விழா!

கவியரசர் கண்ணதாசன் விழா!

செய்திகள் 22-Oct-2013 10:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கண்ணதாசன் விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் கவியரசர் கண்ணதாசன் 10-ஆவது ஆண்டு விழா, சென்னையிலுள்ள குமாரராஜா முத்தையா அரங்கில் நடந்தது. இந்த விழாவை டாக்டர் குமார ராணி மீனா முத்தையா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் தலைமை வகித்த முனைவர் ஒளவை நடராஜன் மற்றும் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம், அரசு நாச்சியப்பன் ஆகியோர் கவியரசர் விருதினை வழங்கினர்.

அத்துடன், கவியரசரைப் பற்றிய கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பணமுடிப்பும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் இசை அமைப்பாளர் எம்.விஸ்வநாதன் வரவேற்புரையாற்ற, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அறிமுக உரையாற்றினார். தமிழருவி மணியன், கவியரசரின் படைப்புகளை தொகுத்து சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் ஏவி.எம்.சரவணன், நல்லிகுப்புசாமி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் எம்.முரளி உட்பட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். கவிஞர் ஆதவன் விழாவினை தொகுத்து வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;