அரசியல் பற்றி விஜய் அறிக்கை!

அரசியல் பற்றி விஜய் அறிக்கை!

செய்திகள் 22-Oct-2013 10:21 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் நடிகர் விஜய், கேரளாவில் அரசியல் சம்பந்தமாக தனது ரசிகர் மன்றத்தினரை சந்தித்து பேசியதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. அதை மறுத்து விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதன் விவரம் வருமாறு…

“சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதைப் படித்து என் ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். நான், கடந்த இரண்டு மாதங்களாக ஹைதராபாத்தில் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன். நான் கேரளாவிற்கே போகவில்லை, அப்பிடியிருக்கும் போது இந்த தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமன்றி நானும் குழப்பம் அடைந்தேன். நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இரவு பகலாக உழைத்து வருகிறேன். எனவே தயவு செய்து உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;