விடியும்வரை விண்மீன்களாவோம்!

விடியும்வரை விண்மீன்களாவோம்!

செய்திகள் 21-Oct-2013 5:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'சாவேனியர் புரொடக்ஷன்ஸ்' என்ற பட நிறுவனம் சார்பாக பி.விஜய்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்து நடிக்கும் படம் ‘விடியும் வரை விண்மீன்களாவோம்’. இதில் விஜய்குமாருடன் ஜெயகாந்தன்,சிவபெருமாள்,சந்துரு ஆகியோரும் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக நேகா, ஹென்னா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்ய, அச்சு இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் விஜய்குமாரிடம் கேட்டபோது,

‘‘நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் நான்கு பேர் கடந்த கால சிந்தனையும் வருங்காலம் பற்றிய யோசனையும் இல்லாமல் நிகழ்காலம் சந்தோஷமாக வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களுக்குள் கருத்து மோதல்கள் மற்றும் சண்டை சச்சரவுகள் வரத் தான் செய்யும். அதை அவர்களே பேசி தீர்த்துக்கொள்ள முடியும் தான்! ஆனால் அதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அந்த பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் அரசியலில் தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கிறான் ஒருவன்.

அதிலிருந்து மாணவர்கள் மீண்டார்களா? என்பதே படத்தின் திரைக்கதை. இந்த படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும் ஆனால் காமெடி படம் இல்லை. காதல் இருக்கும் ஆனால் லவ் சப்ஜெக்ட் இல்லை . கிளைமாக்ஸ் காட்சி முப்பது நிமிடங்கள் த்ரில்லிங்காக இருக்கும்’’ என்கிறார் இயக்குனர் விஜயகுமார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி - டிரைலர்


;