‘சுற்றுலா’வில் திடுக்கிடும் சம்பவங்கள்!

 ‘சுற்றுலா’வில் திடுக்கிடும் சம்பவங்கள்!

செய்திகள் 21-Oct-2013 4:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பர்பிள் விஷன்’ என்ற பட நிறுவனம் சார்பாக எம்.ரவிக்குமார், வி.வெங்கட்ராமன் இணைத்து தயாரிக்கும் படம் ‘சுற்றுலா’. இதில் கதாநாயகனாக ‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒருநாள்’ போன்ற படங்களில் நடித்த மிதுன் நடிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரிச்சர்டு நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ரவிசாமி ஒளிப்பதிவு செய்ய, பரணி இசை அமைக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீஜி நடிக்கிறார். இந்தப் படத்தின் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் வி.ராஜேஷ் ஆல்பர்ட் . படம் பற்றி இயக்குனர் கூறும்போது,

‘‘உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டு நண்பர்களின் உதவியுடன் பதிவு திருமணம் செய்ய, காதலியை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு வருகிறான் ஹீரோ. பதிவு திருமணத்தன்று சில திடுக்கிடும் நிகழ்வுகள் நடக்கின்றன. நண்பர்கள் அனைவரும் மர்மமான முறையில் மாயமாக காதலர்கள் அதிர்ச்சியில் உறைகிறார்கள். அடுத்தடுத்து செல்ஃபோன் மூலம் மிரட்டல் தொடர காதலர்கள் தங்கள் உயிரை காப்பாற்றவும் நண்பர்கள் உயிரை காப்பாற்றவும் உயிருக்கு பயந்து ஓட ஆரம்பிக்கிறார்கள். ஒரே நாளில் நடக்கின்ற இந்த தொடர் நிகழ்வுகளை விறுவிறுப்பான முறையிலும், கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கவும் கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தி உள்ளோம். விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு சுற்றுலா சென்று திரும்பும் போது அந்த பயணம் எப்படி மனதில் இனிமையான நிகழ்வுகளை ஏற்படுத்துமோ, அதை போன்ற ஒரு மகிழ்ச்சியை இந்தப் படமும் ஏற்படுத்தும்’’ என்கிறார் இயக்குனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பழைய வண்ணாரப்பேட்டை சண்டை காட்சி - வீடியோ


;