மாணிக்க வினாயகத்தின் புது முயற்சி!

மாணிக்க வினாயகத்தின் புது முயற்சி!

செய்திகள் 21-Oct-2013 3:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகரும், பாடகருமான மாணிக்க விநாயகம் தனது வீட்டில் (அடையார்) ' வழுவூரார் நாட்டியம் மற்றும் இசைப் பள்ளி' ஒன்றை துவங்கியிருக்கிறார். ‘வழுவூர்’ என்றாலே நேர்த்தி, கலை அழகுடன் கூடிய நாட்டியத்திற்கு பெருமை பெற்றது! வழுவூரை சேர்ந்த மறைந்த பிரபல நாட்டிய மேதை வழுவூர் ராமையா பிள்ளை தான் முதன் முதலாக பரதநாட்டிய கலையை சென்னையில் அறிமுகப்படுத்தியவர். அவரது பாணி நாட்டியத்தை பின்பற்றித்தான் பிரபல நடனக் கலைஞர்களான வித்யா சுப்ரமணியன், கமலா லட்சுமணன், பத்மா சுப்ரமணியம். சித்ரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் பிரபலமடைந்தார்கள். அன்றைய காலத்தில் தலைசிறந்த நாட்டிய கலைஞர்களின் குருவாக திகழந்தவர் வழுவூர் ராமையா பிள்ளை. அத்தகைய பெருமையும், பேரும், புகழும் பெற்ற ராமையா பிள்ளையின் மகனான மாணிக்க வினாயகம் தற்போது தனது தந்தை வழியில் நாட்டியம் மற்றும் இசையில் சேவை புரிந்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு - டிரைலர்


;