காஜல் வீட்டில் டும் டும் டும்!

காஜல் வீட்டில் டும் டும் டும்!

செய்திகள் 21-Oct-2013 12:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'இஷ்டம்' என்ற தமிழ் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் நிஷா அகர்வால். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையருள் ஒருவரான காஜல் அகர்வாலின் தங்கையான இவர் தெலுங்கிலும் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். காஜல் அகர்வாலை விட இரண்டு வயது இளையவரான நிஷா, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில், “நான் காதல் வலையில் சிக்கிக் கொண்டேன். ஆனால் அவர் சினிமாவை சேர்ந்தவர் அல்ல, தொழில் அதிபர்’’ என்று தன் காதலனின் பெயரை குறிப்பிடாமல் சஸ்பென்ஸ் வைத்திருந்தார் நிஷா! இபோது தன் காதலனின் பெயர் கரண் வாலெச்சா என்றும், எங்களது திருமணம் வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார் நிஷா அகர்வால! அப்ப, காஜலுக்கு எப்ப கல்யாணம்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சோலோ - டீசர் 2


;