ஏழாம் அறிவு டாங்லீயுடன் மோதும் அதர்வா!

ஏழாம் அறிவு டாங்லீயுடன் மோதும் அதர்வா!

செய்திகள் 21-Oct-2013 11:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலாவின் பரதேசிக்கு பிறகு அதர்வா நடிக்கும் படம் இரும்புக்குதிரை. பரதேசிக்குப்பிறகு நூற்றுக்கணக்கான கதைகளை சல்லடை போட்டு சலித்து எடுத்த கதையாம் இது. இதில் பைக் ரேஸ் வீரராக நடிக்கிறாராம் அதர்வா. அதனால் சில மாதங்களாக பைக் ரேஸ் வீரர் ஒருவர் மூலம் எந்த மாதிரியெல்லாம் பைக் ஓட்ட வேண்டும் என்பதை பயிற்சி எடுத்து களத்தில் இறங்கியிருக்கிறாராம்.

இதுவரை பாடல், வசன காட்சிகளுக்காக பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்தவர்கள் இப்போது இத்தாலி சென்றுள்ளனர். அங்குதான், பைக் ரேஸ் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்படுகிறதாம். இதில் அதர்வாவுடன் வில்லனாக மோதப்போவது ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுடன் மோதிய டாங்லீயாம்.

அவரும், அதர்வாவும் கலந்து கொள்ளும் பைக் சேசிங் காட்சியிலேயே ஒரு சண்டை காட்சியுள்ளதாம். இருவரும் பைக்கில் சென்று கொண்டிருககும்போதே அவர்களுக்கிடையே நடக்கும் அந்த சண்டை காட்சியை மலேசியாவைச்சேர்ந்த ஒரு ஸ்டனட் மாஸ்டர் பயிற்சி கொடுத்துள்ளாராம. ஏனைய சண்டை காட்சிகளில் இருந்து வித்தியாசமான காட்சி என்பதால், இத்தாலியில் நடைபெறும் இந்த ஒரு சண்டை காட்சியை பத்து நாட்களுக்கு மேல் படமாக்குகிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்துராமலிங்கம் - டிரைலர்


;