'பரதேசி’க்கு உலக அங்கீகாரம்!

'பரதேசி’க்கு உலக அங்கீகாரம்!

செய்திகள் 21-Oct-2013 11:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

லண்டனில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பாலா இயக்கிய, ‘பரதேசி’ படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. இந்த விழாவில் அமெரிக்கா, ரஷ்யா, தென் கொரியா, சிலி மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் இருந்து பல படங்கள் திரையிடப்பட்டன. இந்தியாவிலிருது பாலா இயக்கிய ’பரதேசி’ படம் திரையிடப்பட்டது. சிறந்த இயக்குனர், சிறந்தப் படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய எட்டு பிரிவுகளில் ‘பரதேசி’ படம் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் செழியனுக்கும், சிறந்த காஸ்டியூமருக்கான விருது பூர்ணிமா ராமசாமிக்கும் கிடைத்தது. ஏற்கெனவே பூர்ணிமா ராமசாமி ’பரதேசி’யின் சிறந்த ஆடை அலங்காரத்திறகான தேசிய விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;