வாழ்க்கை மாற்றிய ஃபேஸ்புக்!

வாழ்க்கை மாற்றிய ஃபேஸ்புக்!

செய்திகள் 19-Oct-2013 1:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

திறமை இருந்தால் அதற்கு ஒரு நாள் பெரிய அங்கீகாரம் கிடைக்கும்! இதற்கு சமீபத்திய ஒரு உதாரணம் ’ஃபேஸ்புக்’ மூலம் பாடும் வாய்ப்பு கிடைத்த சந்திரலேகா என்ற பெண்மணி! கேரளாவில் பத்தனம்திட்டாவை சேர்ந்த சந்திரலேகா ஏழை குடும்பத்து இல்லத்தரசி! 3 வயது குழந்தைக்கு தாயான சந்திரலேகா இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் மட்டுமல்ல, நன்றாக பாடக் கூடியவரும் கூட! ஆனால் இவரது திறமை வீட்டிற்குள்ளேயே அடங்கிபோன விஷயமாக இருந்தது! இந்நிலையில் சந்திரலேகாவின் உறவுக்கார இளைஞர் ஒருவர் இவர் பாடிய ஒரு பாடலை மொபைல் ஃபோன் மூலம் வீடியோவாக பதிவு செய்து, யூ-டியூபில் வெளியிட்டார்.

அதை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் அந்தப் பாடலை சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்ய, நிறைய ஃபேஸ்புக் அன்பர்கள் சந்திரலேகா பாடிய பாடலை கேட்டு மகிழ்ந்து, அவரது திறமையை கண்டு அதிசயித்து போயிருக்கிறார்கள்! அதன் விளைவு, இரண்டே நாட்களில் மூன்றரை லடசத்திற்கும் மேலான ‘லைக்’குகள், மற்றும் வெளிநாட்டு வாழ் கேரள மக்களிடமிருந்தான வாழ்த்துக்கள் மற்றும் உதவி புரிவதான வாக்குறுதிகள்! இதனால் கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஃபேஸ்புக் போன்ற இன்றைய நவீன விஷயங்கள் எதுவும் தெரியாத சந்திரலேகா திகைத்து போக, அவருக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது

அது, பிரசாந்த் இயக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்திற்காக, டேவிட் ஷினோ இசையில் பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடவிருந்த பாடலை பாடும் வாய்ப்பு! மலையாளத்தின் பிரபல இயக்குனர் சிபி மலையில் முன்னிலையில் இந்தப் பாடலை பாடி முடித்துள்ள சந்திரலேகா தான் தற்போது மலையாள மீடியாக்களில் அதிக இடம் பிடித்துள்ள விஐபி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;