’அழகுராஜா’வுக்கு ‘U’ சர்டிஃபிகெட்!

’அழகுராஜா’வுக்கு ‘U’ சர்டிஃபிகெட்!

செய்திகள் 19-Oct-2013 10:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தீபாவளியன்று ரிலீசாகி கலக்க இருக்கும் படம் கார்த்தியின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’. எம். ராஜேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் கார்த்தியுடன் காஜல் அகர்வால், ராதிகா ஆப்தே என இரு ‘மும்பை ரசகுலா’க்கள் நடித்திருக்க, எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார். எம்.ராஜேஷ் – கார்த்தி - எஸ்.தமன் முதன் முதலாக கூட்டணி அமைத்துள்ள இந்தப் படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படம், வருகிற 2-ஆம் தேதி, தீபாவளியன்று 300 தியேட்டர்களுக்கும் மேல் ரிலீசாகி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைக்கவிருக்கிறது. பக்கா ஒரு ஃபேமிலி என்டர்டெய்ன்மென்ட் படமாக உருவாகியிருக்கும் ‘அழகுராஜா’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு க்ளீன் 'U' சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆக, ‘அழகுராஜா’வின் கவுண்ட் டவுன் ஆரம்பமானது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பீச்சாங்கை - டீசர்


;