கௌதம் மேனனுடன் இணையும் விஜய் சேதுபதி!

கௌதம் மேனனுடன் இணையும் விஜய் சேதுபதி!

செய்திகள் 19-Oct-2013 2:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வந்து சினிமா துறையில் பிரகாசிப்பவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்! தற்போது கிட்டத்தட்ட 9 படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் இவர் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படங்கள் 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்'. இந்த படங்கள் பற்றி விஜய்சேதுபதி கூறும்போது, ‘“ரம்மி’ தலைப்பிற்கேற்றவாறு திரைக்கதை விறுவிறுப்பாக இருக்கும். ‘ பண்னையாரும் பத்மினியும்’ சின்ன கதையம்சம் கொண்ட படம்.

ஆனால் அருமையான திரைக்கதையுடன் அமைந்துள்ள படம்” என்றவரிடம், “நீங்கள் நடித்துள்ள படங்களில் எந்த படத்தை இரண்டாம் பாகமாக எடுக்கலாம்?’’ என்று கேட்ட போது, “ பீட்சா’ படம் எடுக்கப்பட்டு வருகிறது. அது மாதிரி 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை எடுக்கவும் ஆசை இருக்கு. சுமார் மூஞ்சி குமார் கதாபாத்திரம் என்னை கவர்ந்த ஒன்று! மேலும் பல முன்னணி இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு வருகிறேன். கௌதம் மேனனிடமும் ஒரு கதை கேட்டுள்ளேன். இன்னும் உறுதி செய்யப்படவில்லை . உறுதியானவுடன் அறிவிக்கிறேன்” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;