சூர்யாவுக்கு நன்றி சொன்ன அமீர்!

சூர்யாவுக்கு நன்றி சொன்ன அமீர்!

செய்திகள் 18-Oct-2013 11:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கரு.பழனியப்பன் இயக்கியிருக்கும் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள கமலா தியேட்டரில் நடந்தது. அப்போது இயக்குனர் அமீர், நடிகர் சூர்யா பற்றி பேசும்போது, “இன்று நான் இந்த விழாவில் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நடிகர் சூர்யா தான். அவர் தான் என்னை இயக்குனரா நம்பி முதன் முதலாக இயக்க வாய்ப்பு கொடுத்தார். 12 வருடங்களுக்குப் பிறகு அதை இப்போது ஏன் இந்த மேடையில் சொல்கிறேன் என்றால், ‘மௌனம் பேசியதே’ படத்திற்குப் பிறகு நாங்கள் இது மாதிரி மேடைகளில் சந்தித்ததேயில்லை என்பது தான் உண்மை! எங்களுக்குள் வழக்கமான சந்திப்போ, பேச்சோ எப்போதுமே இருந்தது கிடையாது. அவர் நடித்த ‘நந்தா’ பட ரிலீசுக்குப் பிறகு நாங்கள் ஊர் ஊராக சென்றிருந்தோம்.

அப்போது திண்டுக்கலில் உள்ள ஒரு தியேட்டர் மேடையில் ‘நந்தா’ தயாரிப்பாளர், சூர்யா எல்லாம் உட்கார்ந்திருந்தார்கள். நான் அப்போது கடைசி சீட்டில் உட்கார்ந்திருந்தேன். அப்போது, ‘நந்தா’ தயாரிப்பாளர் பேசும்போது, என் அடுத்த படத்தின் இயக்குனர் இங்கே வந்திருக்கிறார் என்று சொல்லி என்னை மேடைக்கு அழைத்தார். அதன் பிறகு நாங்கள் மூவரும் ஒரு இடத்தில் சந்தித்து பேசும்போது, அந்த தயாரிப்பாளர் சூர்யாவிடம் ‘எனக்கொரு படம் பண்ணிக் கொடுங்க’ன்னு கேட்க, சூர்யா, ‘பண்ணலாம்’ என்றார். அப்ப அவர் அந்த தயாரிப்பாளரிடம், ‘அமீரை வைத்தும் படம் பண்ணணும்னு சொல்றீங்களே?’ என்று கேட்க, ‘ஆமாம், அவரை வைத்தும் படம் பண்ணப் போறேன்’னு அந்த தயாரிப்பாளர் சொல்ல, சூர்யா, ‘நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வந்தீங்கன்னா என்னோட அடுத்த படம் உங்ளுக்குதான், இல்லை தனித் தனியாக வந்தீங்கனா முதல்ல அமீருக்கு தான் பண்ணுவேன்’ என்றார் சூர்யா! அதற்கான நன்றியை தான் இப்ப சூர்யாவுக்கு இங்கே சொல்லி கொள்கிறேன்’’ என்றார்’ அமீர்!.

இந்த விழாவில் படத்தின் இயக்குனர் கரு.பழனியபப்ன், படத்தில் நடித்திருக்கும் பார்த்திபன், விமல், விதார்த் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி, நடிகர் விஷால், நடிகை தேவயானி என பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;