கமலை முந்தும் ஷாருக்கான்!

கமலை முந்தும் ஷாருக்கான்!

செய்திகள் 18-Oct-2013 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு சில திரைப்படங்களை வெளியாகிய கொஞ்ச நாட்களிலேயே சின்னத்திரையிலும் ஒளிபரப்பி காசு பார்ப்பது சினிமாவில் இப்போது ஒரு டிரென்டாக இருக்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூலில் சாதனை படைத்த ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தையும், கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தையும் விரைவில் சின்னத்திரையில் கண்டு களிக்கலாம். கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ வருகிற தீபாவளியன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிற.

ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தை முந்திக்கொண்டு வருகிற ஞாயிற்றுக் கிழமை (20-10-13) அட்வான்ஸ் தீபாவளி விருந்தாக ஜீ டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அது மாதிரி வசூல் சாதனை படைத்த இன்னொரு பாலிவுட் படமான ‘பாக் மில்கா பாக்’ திரைப்படமும் முன்னணி ஹிந்தி சேனல் ஒன்றில் வருகிற ஞாயிறன்று ஒளிபரப்பாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;