ஸ்வேதா மேனனின் கேள்வி!

ஸ்வேதா மேனனின் கேள்வி!

செய்திகள் 17-Oct-2013 5:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல சர்ச்சைகளை கிளப்பிய ‘களிமண்ணு’ படத்திற்குப் பிறகு ஸ்வேதா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் படம் ’கேள்வி’. சினிமாவை கதைக்களமாக வைத்து, தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் இந்தப் படத்தில் சினிமா திரைக்கதை ஆசிரியாராக நடிக்கிறார் ஸ்வேதா மேனன். இவருடன் மனோஜ் கே.ஜெயன், மும்தாஜ், கிருஷ் சத்தார், பூனம் கௌர் ஆகியோரும் நடிக்கிறார்கள். தமிழில் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் திரைக்கதை ஆசிரியாராக ஸ்வேதா மேனனே நடிக்க, மலையாளத்தில் மனோஜ் கே.ஜெயன் நடிக்கும் கேரக்டரில் தமிழில் பார்த்திபன் நடிக்க இருக்கிறார். அடுத்த மாதம் துவங்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தினை ஹாஷிம் மரைக்கார் இயக்க, செல்லத்துரை ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இணையதளம் - டீசர்


;