அஜித்தின் ‘வியாழக்கிழமை’ ராசி!

அஜித்தின் ‘வியாழக்கிழமை’ ராசி!

செய்திகள் 17-Oct-2013 2:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித்தின், ‘ஆரம்பம்’ தீபாவளியன்று, அதாவது நவம்பர் 2-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டு, இப்போது தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே அதாவது இந்த மாதம் 31-ஆம் தேதி வியாழக்கிழமையன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். படத்தை தீபாவளியன்று ரிலீஸ் செய்யாமல் ஏன் இரண்டு நாட்களுக்கு முன்னதாக ரிலீஸ் செய்கிறார்கள்? என்ற கேள்வியை கேட்பவர்களுக்கு இதோ ஒரு சென்டிமென்ட் செய்தி! அதாவது, ‘ஆரம்பம்’ படத்தில் ‘தல’ அஜித் நடிக்க ஒப்பந்தம் செய்துகொண்ட தினம் வியாழக்கிழமை! படத்தின் பூஜை நடந்ததும் வியாழக்கிழமை! படத்தின் முதல் டீஸர் வெளியானது வியாழக்கிழமை! அது மாதிரி படத்தின் டைட்டிலை வெளியிட்டது, டிரெய்லர் வெளியானது, ஆடியோ வெளியானது எல்லாமே வியாழக்கிழமைதான்! இப்படி, ‘ஆரம்பம்’ படத்தின் பெரும்பாலான முக்கிய நிகழ்வுகள் நடந்ததெல்லாம் வியாழக்கிழமை என்பதால் படத்தின் ரிலீசும் வியாழக்கிழமையே இருக்கட்டும் என்று நினைத்திருக்கிறார்கள் போலும்! ஆக, இந்த சென்டிமென்டால் ‘தல’ ரசிகர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே ‘ஆரம்பம்’ படத்தை கண்டு களிக்கும் வாயுப்பு கிடைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;