‘தல’ செய்த சாகசம்!

‘தல’ செய்த சாகசம்!

செய்திகள் 17-Oct-2013 10:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நடிகர் அஜித் குமார் மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து சென்னைக்கு 1,100 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டினார். 16 மணி நேரத்தில் அவர் சென்னை வந்து சேர்ந்தார். இதற்காக ‘பி.எம்.டபிள்யூ கே.1300 எஸ்’ என்ற அதிநவீன மோட்டார் சைக்கிளை வாங்கியிருக்கிறார். இந்த மோட்டர் சைக்கிளிலும் அவர் அணிந்துகொள்ளும் ஹெல்மெட்டிலும் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. அதோடு அந்த ஹெல்மெட்டில் புளூ டூத் வசதியும் இருக்கிறது. இந்த நவீன பைக்கில் அஜித்குமார் கடந்த மாதம் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று, அங்கிருந்து அதே பைக்கில் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். இந்த மோட்டார் பைக் பயணம் குறித்து அஜித் கூறும்போது, “பைக்கை போன்ற டூ-வீலர் வாகனங்களை ஓட்டுபவர்கள்தான் அதிக அளவில் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கும் பெரும்பாலானோர் மரணம் அடைய நேரிடுகிறது. பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நான் அடிக்கடி மோட்டார் சைக்கிள் பயணம் மெற்கொள்கிறேன். நம் நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை பெரும்பாலானோர் சரியாக கடைப்பிடிப்பதில்லை. எல்லோரும் போக்குவரது விதிமுறைகளை சரியாக கடைபிடித்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதே என் விருப்பமும் வேண்டுகோளும்’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம்ம போத ஆகாதே சிங்கள் ட்ராக்


;