ஜி.வி.யின் பள்ளி காதல்!

ஜி.வி.யின் பள்ளி காதல்!

செய்திகள் 17-Oct-2013 1:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசை அமைப்பாளரும், ‘மதயானை கூட்டம்’ படத்தின் தயாரிப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார், ஹீரோ அவதாரம் எடுத்து நடிக்க இருக்கும் படம், ‘பென்சில்’. இயக்குனர் கெளதம் மேனனிடம் உதவியாளராக இருந்த மணி நாகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் முதலில் ஜி.வி.க்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார் என்று செய்திகள் பரவின! ஆனால், அவர் நடிக்கவில்லையாம்! இப்போது கமிட் ஆகியிருப்பவர் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பட ‘ஊதா கலரு ரிப்பன்’ நடிகை ஸ்ரீதிவ்யா! இந்தப் படத்தில் ஜி.வி., ப்ளஸ்–டு படிக்கும் மாணவராக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதிவ்யா தான் மிகவும் பொருத்தமாக இருப்பாராம்! இந்தப் படத்திற்கு ‘பீட்சா’ படப் புகழ் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, இசை அமைப்பாளர் யார் என்று நாம் சொல்ல வேண்டுமா என்ன? ஜி.வி.பிரகாஷ்குமாரே தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;