வில்லனாகவும் நடிக்க தயார்! - கார்த்தி

வில்லனாகவும் நடிக்க தயார்!

செய்திகள் 17-Oct-2013 12:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கார்த்தி நடித்திருக்கும் ‘அழகுராஜா’ படத்தின் புரொமோஷனுக்காக நேற்று திருவனந்தபுரம் சென்றிருந்தார் நடிகர் கார்த்தி. அங்கு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்த கார்த்தி, பிறகு பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேசினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு கார்த்தி பதிலளித்து பேசும்போது,

”எல்லோரும், ‘அண்ணன் சூர்யாவுடன் எப்போது இணைந்து நடிக்கப் போறீங்க?’ என்று கேட்கிறார்கள். அது மாதிரியான ஒரு ஸ்கிரிப்ட்டுடன், நல்ல ஒரு இயக்குனர் வந்தால் கண்டிப்பா நடிப்பேன். அந்த ஸ்கிரிப்ட்டில் வில்லனாக நடிக்க வேண்டும் என்றால் கூட நான் நடிக்க ரெடியா இருக்கேன். அது மாதிரி, ‘மலையாள படங்களில் நடிக்க மாட்டீங்களா?’ என்றும் கேட்கிறார்கள். எனக்கு மலையாள மொழி அவ்வளவாக தெரியாது என்றாலும், ‘உஸ்தாத்’ ஹோட்டல் போன்ற நிறைய மலையாள படங்களை பார்க்கிறேன். இப்போது மலையாளத்திலும் மாறுபட்ட கதைகள், வித்தியாசமான ட்ரீட்மென்டில் நிறைய படங்கள் வருது.

நான் அமெரிக்காவில் இருந்து வந்த சமயத்தில் எந்த மாதிரியான படங்களை பார்க்கணும்னு நினைத்தேனோ இப்போது அது மாதிரியான நிறைய படங்களை எடுத்துக்கிட்டிருக்காங்க. அது சந்தோஷமாக இருக்கு. நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் மலையாளத்திலும் நடிப்பேன். நிறைய ஹீரோயின்ஸ் எல்லா மொழியிலயும் நடிக்கிறாங்க. அது மாதிரி நானும் டிரை பண்ணலாம் என்றிருக்கேன்’’ என்று சொல்லி சிரித்தவர், வேறொரு கேளிவிக்கு பதில் அளிக்கையில், ”இந்தப் படத்துக்கு ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ என்ற பெயர் வைத்ததும் நடிகர் கவுண்டமணி சாரை சந்தித்து அவரது ஆசி வாங்கி வந்தேன்! ஏன்னா, ‘அழகுராஜா’ என்ற பெயருக்கு தகுதியானவர் அவர்தான். நான், இயக்குனர் ராஜேஷ், சந்தானம் என எல்லோரும் கவுண்ட்மணி சாரின் ரசிகர்கள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - நானா thaana பாடல் வீடியோ


;