சூர்யா படத்தில் புதிய தொழில்நுட்பம்!

சூர்யா படத்தில் புதிய தொழில்நுட்பம்!

செய்திகள் 16-Oct-2013 6:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை என்றாலும், படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் சூர்யா - லிங்குசாமி கூட்டணியோடு, இப்போது ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவனும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்க, இந்தப் படத்தில் ‘ரெட் டிராகன்’ என்ற அதி நவீன கேமராவை பயன்படுத்தவுள்ளனர். ஒரு இந்திய மொழி படத்தில் இந்த கேமரா பயன்படுத்துவது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான டெஸ்ட் ஷூட் இன்று காலை சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;