‘சுட்டகதை’ ரிலீஸ் எப்போது?

 ‘சுட்டகதை’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 16-Oct-2013 3:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்திருக்கும் படம் ‘சுட்டகதை’. காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பாலாஜி வேணுகோபால், வெங்கடேஷ் ஹரிகோபால், நாசர், லட்சுமி ப்ரியா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். ஆரோ 3டி தொழில் நுடபத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கு மேட்லி ப்ளூஸ் (பிரசாந்த் - ஹரிஷ்) இசை அமைத்திருக்க, சுப்பு இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் எல்லா வேலைகளும் முடிவடைந்த நிலையில் ஏற்கெனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு சில காரணங்களால் படம் வெளியாகாமல் இருந்தது. ஆனால இப்போது படம் வருகிற 25-ஆம் தேதி, அதாவது தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாக வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;