15 படங்கள்… நான்கில் விளையாட்டு வீரர்!

 15 படங்கள்… நான்கில் விளையாட்டு வீரர்!

செய்திகள் 15-Oct-2013 2:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடிப்பவர்களுக்கு ஒரு போலீஸ் அதிகாரிக்கான இமேஜ் உருவாகி விடுவது சகஜம்! அதை போல தன்னுடைய 15 படங்களில் நான்கு படங்களில் விளையாட்டு வீரராக நடித்திருக்கிறார் ‘ஜெயம்’ ரவி. ‘தாஸ்’ படத்தில் கால் பந்தாட்ட வீரராக , ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’யில் குத்துச் சண்டை வீரனாக , ‘ பேராண்மை’ படத்தில் என் சி. சி. பயிற்சியாளராக என நடித்தவர் தற்போது முடியும் தருவாயில் உள்ள ’பூலோகம்’ படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். இதனால் ‘ஜெயம்’ ரவிக்கு விளையாட்டு வீரருக்கான ஒரு இமேஜ் உருவாகி இருக்கிறது. இது குறித்து ரவி கூறும்போது,

“ எனக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகம் .அந்த ஆர்வம் என்னுள் தணியாத ஊக்கத்தையும், ஒழுக்கத்தையும் கற்று தந்தது என்றால் அது மிகையாகாது. நான் என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன் . ஒரு விளையாட்டு வீரனுடைய மன நிலையில் தான் நான் வெற்றி தோல்விகளை எதிர் கொள்கிறேன் .இந்த பக்குவத்துக்கு என்னுடைய விளையாட்டு ஆர்வம் மிகவும் உதவியது . விளையாட்டு துறைக்காகவும், விளையாட்டு போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் என்னுடைய கணிசமான நேரத்தையும் , சக்தியையும் செலவிட இருக்கிறேன். எனக்கு பெரும்பாலான படங்களில் விளையாட்டு வீரன் பாத்திரம் அமைவது திட்டமிட பட்டது அல்ல! நான் சவாலான எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க தயாராகவே உள்ளேன் . தற்போது நடித்து வரும், சமுத்திர கனியின் இயக்கத்தில் உருவாகும் ' நிமிர்ந்து நில்' மற்றும் கல்யான் இயக்கத்தில் உருவாகும் 'பூலோகம் ' ஆகிய இரு படங்களிலும் எனக்கு சவாலான பாத்திரங்களே! அவை ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் ஐயம் இல்லை’’ என்கிறார் நம்பிக்கை ஒளிர!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - டிரைலர்


;