’விழா’ முதல் லுக் போஸ்டர்!

’விழா’ முதல் லுக் போஸ்டர்!

செய்திகள் 15-Oct-2013 2:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இராம. நாராயணனின் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும், ‘அஷுர் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘விழா’. கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்த இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. பாரதி பாலகுமாரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, இப்போது ஹீரோவாக புரொமோஷன் பெற்றிருக்கும் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க, ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றியுள்ள பல இடங்களில் நடந்துள்ளது. யூ.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. படத்தை அடுத்த மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - சாரட்டு வண்டியில பாடல் வீடியோ


;