நியூசிலாந்தில் வினய் – மதுரிமா!

நியூசிலாந்தில் வினய் – மதுரிமா!

செய்திகள் 15-Oct-2013 11:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நியூசிலாந்தை சேர்ந்தவர் சசி நம்பீசன். இவர், ‘ஐஸ்வர்யா என்டர்டெய்ன்மென்ட்’ என்ற பட நிறுவனம் சார்பில் ஒரு தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குனர் அனில் குமார் இயக்குகிறார். பயணத்தின்போது ஏற்படும் காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படம் நியூசிலாந்தில் படமாகவிருக்கிறது. இதில் வினய், மதுரிமா ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தை இயக்கும் அனில் குமர், ஏற்கெனவே மலையாளத்தில், மம்முட்டி, ஜெயராம், திலீப் ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து 38 படங்களை இயக்கியிருக்கிறார். இவர் தமிழில் முதன் முதலாக இயக்கும் இந்தப் படம் அவரது 39-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடந்து வர, விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;