நடிகரானார் ‘ஹிட்’ டைரக்டர்!

நடிகரானார் ‘ஹிட்’ டைரக்டர்!

செய்திகள் 15-Oct-2013 10:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவின் உதவியாலர் குரு ரமேஷ் இயக்கும் படம், ‘என்ன சத்தம் இந்த நேரம்’. இந்தப் படத்தை ’ஏ.வி.ஏ.புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.வி.அனுப் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் உலக சினிமாவில் முதன் முதலாக ஒரே பிரசவத்தில் பிறந்த, ஒரே தோற்றம் கொண்ட 8 வயதே ஆன நான்கு குழந்தைகள் ஆதீதி, ஆக்ரிதி, அக்‌ஷிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரபல இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா இப்படத்தின் கதையை கேட்டு மிகவும் பிடித்துப் போக, இந்தப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வருகிறார். அஜித் நடித்த ‘காதல் மன்னன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த் மானு 15 வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் நிதின் சத்யா, புதுமுகம் மாளவிகா வேல்ஸ் ஆகியோரும் நடிக்க, படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாணிக் - டீசர்


;