சிம்புவின் அடுத்த ஜோடி!

சிம்புவின் அடுத்த ஜோடி!

செய்திகள் 15-Oct-2013 10:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘விண்ணை தாண்டி வருவாயா ' படத்தில் சிம்புவிடம், ‘இங்க என்ன சொல்லுது?’ என்ற கேள்வியை கேட்டு பிரபலமானவர் கணேஷ். அந்தப் படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது' படம் வரை தொடர்ந்து வருகிறது . இந்தப் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நடிப்பதற்கான நடிகையின் தேர்வு நடந்து வந்தது . சிம்புவுடன் இதுவரை ஜோடியாக நடிக்காத ஒருவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த கணேஷ், இப்போது ஆன்ட்ரியாவை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார். இது குறித்து கணேஷ் கூறும்போது ‘‘சிம்புவும், ஆன்ட்ரியாவும் மிக சரியான ஜோடியாக அமைந்திருக்கிறது. ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவும் பிடிக்கும். படத்தின் இறுதிகட்ட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்’’ என்கிறார் .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;