மைக்கேல் ஜாக்சன் சாதனையை முறியடித்த அக்‌ஷய் குமார்!

மைக்கேல் ஜாக்சன் சாதனையை முறியடித்த அக்‌ஷய் குமார்!

செய்திகள் 12-Oct-2013 3:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மைக்கேல் ஜாக்சனின் சாதனையை முறியடித்திருக்கிறார் பாலிவுட்டின் ‘சூப்பர் ஹீரோ’ அக்‌ஷய் குமார்! எப்படி என்கிறீர்களா? அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘பாஸ்’. மம்முட்டி நடித்த ‘போக்கிரி ராஜா’ மலையாள படத்தின் ஹிந்தி ரீ-மேக் ஆன இந்தப் படம் விரையில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர், உலகிலேயே பெரிய போஸ்டர் என்று கின்னஸ்ஸில் இடம் பிடித்திருக்கிறது. இதுவரை இந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டிருந்தது மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் ஈஸ் இட்’ என்ற டாகுமென்டரி படத்தின் போஸ்டர் தான்! ‘பாஸ்’ படத்தின் விளம்பரத்துக்காக அக்‌ஷய் குமாரின் ரசிகர்கள் அமைப்பான ‘டீம் அக்‌ஷய்’ உருவாக்கியிருக்கும் போஸ்டர் 58.87 மீட்டர் அகலமும், 59.94 மீட்டர் உயரமும் கொண்டதாகும். இது ஜாக்சன் உருவாக்கிய போஸ்டரை விட பெரியது. இதில் வேடிக்கை என்னவென்றால் மைக்கேல் ஜாக்சனுக்காக போஸ்டரை டிசைன் செய்து உருவாக்கிய, அமெரிக்காவிலுள்ள மாக்ரோ ஆர்ட்ஸ்’ நிறுவனம் தான் ‘பாஸ்’ படத்திற்கான இந்த பிரம்மாண்ட போஸ்டரையும் வடிவமைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;