தீபாவளிக்கு முன்னதாகவே 'தல'யின் ஆரம்பம்!

தீபாவளிக்கு முன்னதாகவே ‘தல’யின் ஆரம்பம்!

செய்திகள் 12-Oct-2013 3:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற தீபாவளியன்று ரிலீசாக இருப்பதாக விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கிற படங்கள் கார்த்தியின் ‘அழகுராஜா’, அஜித்தின் ‘ஆரம்பம்’, விஷாலின் ‘பாண்டியநாடு’ ஆகியவை தான்! இதில் கார்த்தியின் ‘அழகுராஜா’ படத்திற்காக 300 தியேட்டர்களுக்கும் மேல் புக் செய்யப்பட்டு விட்டன! அஜித்தின் ‘ஆரம்பம்’ தீபாவளி ரிலீஸ் என்று ஒரு சில நாட்கள் விளம்பரம் வந்துகொண்டிருந்த நிலையில், சமீப காலமாக இந்தப் படம் சம்பந்தமான எந்த விளம்பரங்களும் பத்திரிகைகளில் வரவில்லை. இதனால், ’ஆரம்பம்’ தீபாவளியன்று ரிலீசாகுமா? ஆகாதா? என்ற ஒரு குழப்பம் ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தப் படத்துக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றும் அதனால் ‘ஆரம்பம்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட்டில் பேசப்பட்டது. ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் ‘ஆரம்பம்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இப்படக் குழுவினர் படத்தை தீபாவளிக்கு முன்னதாகவே அதாவது வருகிற 31-ஆம் தேதி, அல்லது நவம்பர் 1—ஆம் தேதி ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் திட்டத்தோடு அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார்கள். ஆக, ‘தல’யின் ‘ஆரம்பம்’ தீபாவளிக்கு முன்னதாகவே ரிலீசாகி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைக்கவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;