விஜய்சேதுபதியின் வன்மம்!

விஜய்சேதுபதியின் வன்மம்!

செய்திகள் 12-Oct-2013 12:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’பீட்சா’, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூதுகவ்வும்’ போன்ற பல படங்களில் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து, ஜெட் வேக வளர்ச்சி அடைந்த நடிகர் விஜய்சேதுபதி. தற்போது, ‘சங்குதேவன்’ என்ற படத்தில் ரொம்பவும் வித்தியாசமான ஒரு கெட்-அப்பில் நடித்து வரும் இவர் அடுத்து ஜெய் கிருஷ்ணா இயக்கும் ‘வன்மம்’ என்ற படத்திலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் இவருடன் கிருஷ்ணாவும் இணைந்து நடிக்க இருக்கிறார். முதலில் இந்தப் படத்திற்கு ரகுநந்தன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தமன், தமிழ், தெலுங்கு மொழிகளில் ரொம்பவும் பிசியான இசை அமைப்பாளராக இயங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;