100 நாட்களை கடந்த ‘சிங்கம் 2’

100 நாட்களை கடந்த ‘சிங்கம் 2’

செய்திகள் 12-Oct-2013 11:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போதைய சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஓடினாலே அது பெரிய வெற்றியாக கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான படங்கள் ரிலீசான ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு ஓடும் நிலையில், வித்தியாசமான கதைக் களத்தில், நல்ல திரைக்கதையுடன், விறுவிறு இயக்கத்துடன், அந்த கதைக்கேற்ற கலைஞர்களின் சிறந்த நடிப்புடன் வெளியாகும் சில படங்கள் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம்தான். அந்த வரிசையில் இடம் பிடித்துள்ள சமீபத்திய படம் ‘சிங்கம் 2’. ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்த இந்தப் படம் வெளியாகி நேற்று நூறாவது நாளை தொட, இன்னமும் சிங்கம் தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த வெற்றி எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி தான் என்றாலும், அதை நினைவுப்படுத்துவதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறதல்லவா?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;