ஹிந்தி, மலையாளம் பேசும் ‘சூதுகவ்வும்’

ஹிந்தி, மலையாளம் பேசும் ‘சூதுகவ்வும்’

செய்திகள் 12-Oct-2013 10:54 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நலன் குமாரசாமி இயக்கத்தில் சமீப்பத்தில் திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆன படம் ’சூதுகவ்வும்’. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடித்திருந்தனர். தமிழில் வசூலில் கல்லா கட்டிய இந்தப் படம் அடுத்து ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ரீ-மேக் ஆகிறது! ஹிந்தியில் ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இவர் சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சூதுகவ்வும்’ படத்தின் ரீ-மேக் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மற்றும் கன்னட படவுலகின் பிரபல தயாரிப்பாளரான ’ராக்லைன்’ வெங்கடேஷ் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். ‘சூதுகவ்வும்’ படத்தை ஹிந்தியில் ரோஹித் ஷெட்டியுடன் அருண்பாண்டியன், ’ராக்லைன்’ வெங்ககேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் இம்ரான் கான், ஷர்தா கபூர் ஜோடியாக நடிக்க, இதன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ‘சூதுகவ்வும்’ மலையாள ரீ-மேக்கை அருண்பாண்டியனின் ‘ஏ.பி.குரூப்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. மலையாளத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;