சூர்யாவின் ஹிட் ராசி!

சூர்யாவின் ஹிட் ராசி!

செய்திகள் 11-Oct-2013 5:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘அழகுராஜா’. இந்தப் படத்தை எம்.ராஜேஷ் இயக்கியிருக்க, ‘ஸ்டுடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். வருகிற தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் இந்தப் படத்திறகு தமன் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னயிலுள்ள சத்யம் தியேட்டரில் கோலாகலமாக நடக்க, ஆடியோவை கார்த்தியின் அண்ணன் சூர்யா வெளியிட்டார். இதற்கு முன் ராஜேஷ் இயக்கிய, ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ ஆகிய மூன்று படங்களின் ஆடியோவையும் நடிகர் சூர்யா தான் வெளியிட்டிருக்கிறார். சூர்யாவின் ராசி, அந்த மூன்று படங்களின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று, அந்தப் படங்களும் சூப்பர் ஹிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது! இப்போது அந்த ராசி, எம்.ராஜேஷ் - கார்த்தி முதன் முதலாக கூட்டணி அமைத்திருக்கும் ’அழகுராஜா’விலும் தொடர்கிறது. ஒரு சில தினங்களுக்கு முன் வெளியாகிய இந்தப் படத்தின் ‘செல்லம்…’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, நேற்று ரிலீசான பாடல்களும் ‘மியூசிக் ட்ரீட்’டாக அமைந்து ஹிட் ஆகியிருக்கிறது. ஆக, ‘அழகுராஜா’வை பார்ப்பதற்கான ‘கவுன்ட் டவுன்’ ஸ்டார்ட் ஆகி விட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;