‘பாட்ஷா’ இயக்குனரின் அடுத்த படம்!

 ‘பாட்ஷா’ இயக்குனரின் அடுத்த படம்!

செய்திகள் 11-Oct-2013 4:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கமல்ஹாசன் நடிப்பில் ’சத்யா’, ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ மற்றும் மோகன்லால் சிரஞ்சீவி, விஷ்ணுவர்த்தன் நடித்த படங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. சமீபகாலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி, ஒரு தொலைக்காட்சி தொடரை இயக்கி வந்த சுரேஷ் கிருஷ்ணா மீண்டும் சினிமாவுக்கு வந்து ஒரு படத்தை சொந்தமாக தயாரித்து இயக்க இருக்கிறார். இதற்காக ‘புரொடக்ஷன்ஸ்’ என்னும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள சுரேஷ்கிருஷ்ணா இந்த படத்தில் பிரின்ஸ் என்பவரை கதாநாயகனாக அறிமுகபடுத்துகிறார். கதாநாயகியாக ‘மிஸ் இந்திய’ அழகி வனியா மிஸ்ரா நடிக்கிறார். இன்னும் பெயர் வைக்காத இந்தப் படம் காதல், காமெடி, குடும்பப் பாசம் கலந்த ஜனரஞ்சகப் படமாக உருவாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;