டிஸ்கோ சாந்தியின் கணவர் மரணமடைந்தார்!

டிஸ்கோ சாந்தியின் கணவர் மரணமடைந்தார்!

செய்திகள் 10-Oct-2013 11:26 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவரும், தெலுங்கு நடிகருமானவர் ஸ்ரீஹரி. இவரும், டிஸ்கோ சாந்தியும் தெலுங்கு படங்களில் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. அதன் பின் பெற்றோரகள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்து வந்த ஸ்ரீஹரி, பிறகு படிபடியாக வளர்ந்து கதாநாயகனாக நடிக்கத் துவங்கினார். தமிழில் ‘பரதன்’, ‘மார்க்கண்டேயன்’, ‘மாவீரன்’, ‘வேட்டைக்காரன்’ போன்ற பல படங்களில் நடித்த ஸ்ரீஹரி சமீபத்தில் நடித்த தமிழ் படம், ஜெயசீலன் இயக்கிய ‘பள்ளிக்கூடம் போகாமலே’.

ஒரு ஹிந்திப் படத்தில் நடிப்பதற்காக மும்பைக்குச் சென்றிருந்த ஸ்ரீஹரி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். ஸ்ரீஹரி – டிஸ்கோ சாந்தி தம்பதியருக்கு செஷாய், மெகாம்ஸ் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஸ்ரீஹரியின் உடல் மும்பையில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவருடைய இறுதி சடங்குகள் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது. ஸ்ரீஹரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ’டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 2 வது இன்னிங்ஸ்


;