நஸ்ரியாவின் இறுதி முடிவு!

நஸ்ரியாவின் இறுதி முடிவு!

செய்திகள் 9-Oct-2013 4:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த இரண்டு நாட்களாக மீடியாக்களில் இடம் பிடித்த பரபரப்புச் செய்தி ‘நய்யாண்டி’ பட விவகாரம்! நடிகை நஸ்ரியா – இயக்குனர் சற்குணம் ஆகியோருக்கிடையில் விஸ்வரூபமெடுத்த பிரச்சனை இப்போது நல்ல முடிவுக்கு வந்து விட்டது! எப்படி என்றால், இன்று காலையில் நஸ்ரியாவின் தந்தை நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், ‘நய்யாண்டி’ படத்தின் தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் ஆகியோர் 'நய்யாண்டி' படத்தை பார்த்திருக்கின்றனர். நஸ்ரியா தரப்பில் கூறப்பட்ட சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி ஆபாசமாக இல்லை என்று நிரூபணமாக, அதன் பிறகு சமரச பேச்சு வார்த்தைகள் நடந்திருக்கின்றன. அதன்படி சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்க, ‘நய்யாண்டி’ பட தயாரிப்பு தரப்பினர் சம்மதிக்க, நஸ்ரியா தரப்பினரும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்! இது சம்பந்தமாக இன்று மாலை, ‘நய்யாண்டி’ படக்குழுவினரும், நஸ்ரியா தரப்பினரும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கின்றனர். ஆக, கடந்த இரண்டு நாட்களாக கோலிவுட்டில் விசிக் கொண்டிருந்த புயல் ஒய்ந்து வீட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;