அனுஷா, அனுஷ்கா மாதிரி வருவாரா?

அனுஷா, அனுஷ்கா மாதிரி வருவாரா?

செய்திகள் 9-Oct-2013 2:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்டிமென்ட், மூட நம்பிக்கை அதிகமாக இருக்கும் இடம் சினிமா! படப் பெயர் வைப்பதிலிருந்து துவங்கி, படம் பிடிப்புத் துவங்கும் இடம் வரை சினிமாவின் சகல விஷயங்களிலும் சென்டிமென்டை பார்க்கும் தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர், நடிகைகள், தாங்கள் கனவு கண்டது மாதிரியான ஒரு சினிமா வாழ்க்கை அமையாமல் போகும்போது ஜோதிடர்களை சந்திப்பதும், நியூமராலஜி படி பெயர் மாற்றி வைப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது தமிழின் ஒரு பிரபல கதாநாயகி நடிகை தனது பெயரை மாற்றி வைத்துள்ளார்! அவர் வேறு யாருமல்ல! ‘காதலில் விழுந்தேன்’ பட நாயகி சுனைனாதான்! சுனைனா தற்போது தனக்குச் சூட்டியிருக்கும் புதுப் பெயர் அனுஷா! ஆஹா பெயர் நல்லா இருக்கே! ஆனால் இதே பெயரில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை இருந்தார் என்பது சுனைனாவுக்கு சாரி, அனுஷாவுக்கு தெரியுமா என்பது நமக்குத் தெரியாது. எது எப்படியோ, பெயர் மாற்றம் செய்த ராசியால் அனுஷா நடிகை அனுஷ்கா மாதிரி பெரிய நடிகையானால் நமக்கும் சந்தோஷம்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தொண்டன் - டிரைலர்


;