தமிழில் ஒரு ‘லைஃப் ஆஃப் பை’

தமிழில் ஒரு ‘லைஃப் ஆஃப் பை’

செய்திகள் 9-Oct-2013 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

“இது நடந்த ஒரு நிஜ சம்பவம்! இராணுவத்துக்கும், போராளிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து கொண்டிருக்கும்போது தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, கடல் வழியாக படகில் தப்பிக்கும் ஒரு கும்பலின் உணர்ச்சி மிகு போராட்டம் தான் ‘ராவணதேசம்’ படத்தின் கதைக் கரு. கடலில் நடந்த சம்பவங்களின் தொகுப்பான ‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படம் எப்படி ஒரு உணர்வுபூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியதோ அது போன்ற ஒரு உணர்வை இந்தப் படமும் ஏற்படுத்தும். இதிலும் காதல், காமெடி, ஆக்‌ஷன், எமோஷன்ஸ் எல்லாம் இருக்கு’’ என்கிறார் ‘ராவணதேசம்’ படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான அஜெய்! ‘நியூ எம்பயர் செல்லுலாய்ட்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் லக்‌ஷ்மிகாந்த் தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜெயுடன் கதாநாயகியாக ஜெனிபர் நடிக்கிறார். வி.கே.ராம்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.சிவன் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;