’யாழ்ப்பாணம்’ உருவான கதை!

’யாழ்ப்பாணம்’ உருவான கதை!

செய்திகள் 9-Oct-2013 12:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மிஸ்டிக் ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து, இயக்கும் படம் ‘யாழ்’. இந்தப் படத்தில் வினோத், டேனியல் பாலாஜி, சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்க, கதாநாயகிகளாக லீமா, நீலிமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ‘யாழ்’ படம் குறித்து எம்.எஸ்.ஆனந்த் கூறும்போது, “யாழ் என்பது ஈழத்தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இசைக் கருவி! பாணர்கள் என்பவர்கள் இக்கருவியை வைத்துக்கொண்டு சைவ சித்தாந்தக் கருத்துக்களையும், தமிழர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஊர் ஊராகச் சென்று பரப்பினார்கள். இலங்கியிலுள்ள யாழ்ப்பாணம் ஊருக்கு இந்தப் பெயர் வந்ததே இப்படித்தான்! யாழ் இசையும், யாழ் கலையும், கலாச்சாரமும் சம்மந்தபட்ட கதாபாத்திரங்களுக்கு இடையில் அங்கு சமீபத்தில் நடந்த இறுதி போரின்போது என்ன நடந்தது என்பதே ‘யாழ்’ திரைப்படத்தின் திரைக்கதை! இந்தப் படத்தை நவம்பர் மாதம் உலகம் முழுக்க வெளியிட உள்ளோம்’’ என்கிறார். இந்தப் படத்திற்கு எஸ்.என்.அருணகிரி இசை அமைக்க, கருப்பையா, நசீர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;