மோலிவுட்டிற்குச் செல்லும் ராதா மோகன்!

மோலிவுட்டிற்குச் செல்லும் ராதா மோகன்!

செய்திகள் 9-Oct-2013 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ராதா மோகன் இயக்கிய ‘மொழி’ படத்தில் கதாநாயகனாக நடித்த ப்ருத்திவிராஜ், அதற்குப் பிறகு அவர் இயக்கத்தில் ‘அபியும் நானும்’, ‘பயணம்’ ஆகிய படங்களிலும் நடித்தார். ஒரு இயக்குனர் இயக்கத்தில் ஒரு நடிகர் தொடர்ந்து மூன்று படங்களில நடிப்பது என்பது சினிமாவை பொறுத்தவரையில் அரிதான விஷயம் தான்! இப்போது இருவரும் மீண்டும் நான்காவது முறையாக கை கோர்க்கிறார்கள். ஆனால் தமிழ் படத்தில் அல்ல; மலையாள படத்தில்! ஒரு மலையாள படத்தை இயக்க வேண்டும் என்பது ராதா மோகனின் ஆசையாக இருந்தது. அதற்கு உதவுவதாக நடிகர் ப்ருத்திவிராஜும் கூறியிருந்தாராம். அதனால் கடந்த ஒரு சில மாதங்களாக அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாகி இயங்கி வந்தார் ராதாமோகன். இப்போது ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டதாம். இதில் ப்ருத்திவிராஜ் ஹீரோவாக நடிக்க, படத்தின் பெயர், கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகளுக்கான தேர்வு தற்போது நடந்து வருகிறது. இயக்குனர் பேரரசுவை தொடர்ந்து இப்போது ராதா மோகனும் மோலிவுட்டில் நுழைந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;