நியூ ஜெனரேஷன் சினிமாவில் நடிக்க ஆசை!

நியூ ஜெனரேஷன் சினிமாவில் நடிக்க ஆசை!

செய்திகள் 8-Oct-2013 11:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல நடன கலைஞரும், நடிகையுமானவர் லட்சுமி கோபாலசாமி. தமிழில் ‘பீமா’, ‘கனவு மெய்பட வேண்டும்’ ஆகிய படங்களிலும் ஏராளமான மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்தவர் இவர். சமீபகாலமாக நடிப்பிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி, நாட்டியத்தில் கவனம் செலுத்தி வந்த லட்சுமி கோபாலசாமி, நல்ல கேரக்டர்கள் அமையுமானால் மீண்டும் நடிக்க தயார் என்று சமீபத்தில் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, ‘’இப்போது எல்லா மொழியிலும் நியூ ஜெனரேஷன் சினிமா தான் அதிகம் வெற்றிபெற்று பெறுகிறது. இதற்கு காரணம் புது சிந்தனையோடு வரும் திறமைமிக்க இளைஞர்கள் தான்! இது மாதிரி மாறுபட்ட சிந்தனையோடு எடுக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் ஹீரோவுக்கு மட்டுமல்லாமல் பெண் கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. இது மாதிரியான படங்களில் நடிக்க எனக்கு ஆசையாக இருக்கு. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்’’ என்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சண்டிவீரன் - அதிகாரபூர்வ டீஸர்


;