படமாகிறது நரேந்திர மோடியின் வாழ்க்கை!

படமாகிறது நரேந்திர மோடியின் வாழ்க்கை!

செய்திகள் 8-Oct-2013 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

குஜராத் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் நரேந்திர மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடித்து, படத்தை தயாரிக்கவும் செய்கிறார். பரேஷ் ராவல் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் என்பதும், குஜராத்தில் நடந்த சென்ற சட்டமன்ற தேர்தலில் மோடிக்காக தேர்தல் களத்தில் இறங்கி பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் வெளியாகி ஹிட் ஆன ‘ஓ மை காட்’ என்ற படத்தை தயாரித்தவரும் இந்த பரேஷ் ராவல் தான்! அது மட்டிமில்லாமல் சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ’சர்தார்’ என்ற படத்திலும் நடித்திருந்த பரேஷ் ராவல், நரேந்திர மோடி சம்பந்தமான படத்தை 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறார். இந்தப் படம் குறித்து பரேஷ் கூறும்போது, ‘இந்தப் படம் மோடியின் புகழ் பாடுவதற்காகவோ, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவோ எடுக்கப்படும் படம் அல்ல! இந்தப் படம் சம்பந்தமான சர்ச்சைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னே துவங்கப்பட்டது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;