தீபாவளி ரேசில் முந்தும் அழகுராஜா!

தீபாவளி ரேசில் முந்தும் அழகுராஜா!

செய்திகள் 5-Oct-2013 6:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற தீபாவளி ரேசில் குதிக்க தயாராகி வருகிறது கார்த்தியின் ’ஆல் இன் ஆல் அழகு ராஜா’. எஸ்.தமன் இசை அமைப்பில் நேற்று வெளியாகிய இந்தப் படத்தின் ‘செல்லம்…’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, ’அழகு ராஜா’ படத்தை தமிழகத்தின் 270 தியேட்டர்களில் வெளியிடுவதற்கான வேலைகள் முடிந்து விட்டது. ‘அழகு ராஜா’ வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் விதமாக ’அழகு ராஜா’வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கார்த்தி - காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை ‘ஹாட்ரிக் வெற்றியாளர்’ எம்.ராஜேஷ் இயக்கியிருக்க, 'ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தாயாரித்திருக்கிறார். பக்கா ஒரு ஃபேமிலி என்டர்டெய்ன்மென்ட் படமாக உருவாகியுள்ள ‘அழகு ராஜா’ தீபாவளி திருநாளில் வெளியாகி சரவெடியாய் வெடிக்கப் போகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;