வழி நடத்தும் கல்வி, காதல்!

வழி நடத்தும் கல்வி, காதல்!

செய்திகள் 5-Oct-2013 12:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

''உலகத்தில் அழியாத சொத்து கல்வி. வாழ்க்கையில் கடைசிவரைக்கும் நம் கூட இருப்பதும் நம்மை வழி நடத்துவதும் கற்ற கல்வியும் காதலித்த காதலும் தான். வாழ்க்கை சில பேருக்கு சதுரமா இருக்கலாம். சில பேருக்கு வட்டமா இருக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் நாயகனுக்கு ரொம்ப மட்டமா இருந்துச்சு. இந்த மட்டமான வாழ்கையில் இருந்து இவன் உயர் மட்டத்திற்கு போனானா இல்லையா? என்பதுதான் ‘பப்பாளி’ படத்தின் திரைக்கதை. இந்தியாவில் எப்பொழுதுதெல்லாம் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறதோ அப்போதெல்லாம் காமெடி படங்கள் வெற்றி அடைந்து மக்களின் மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுபட வைத்திருக்கிறது. அதே போல் இந்த ‘பப்பாளி’ படமும் மக்களை மகிழ்விக்கும்’’ என்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஏ.கோவிந்தமூர்த்தி.

இந்தப் படத்தில் ‘சரவணன் மீனாட்சி’ தொடர் புகழ் செந்தில் கதாநாயகனாக நடித்திருக்க, இஷாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை ‘அரசூர் மூவிஸ்’ பட நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத் குமார், ஏ.ராஜீவ் மேனன் தயாரித்திருக்கிறார்கள். இசை : விஜய் எபிநேசர், ஒளிப்பதிவு : விஜய்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரொம்ப நல்லவன்டா நீ - டீசர்


;