இயக்குனருக்கு ஜோடியான ‘காதல்’ நாயகி!

இயக்குனருக்கு ஜோடியான ‘காதல்’ நாயகி!

செய்திகள் 5-Oct-2013 11:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தியா நிறைய படங்களில் நடித்தாலும், ‘காதல்’ படத்தில் அமைந்தது மாதிரியான ஒரு கேரக்டரோ, அது மாதிரியான ஒரு வெற்றிப் படமோ அவருக்கு அமையவில்லை. இதனால் தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தால், சந்தியா தனது தாய் மொழியான மலையாள படங்களில் நடிக்கத் துவங்கினார். அங்கு ஒரு சில படங்களில் நடித்த சந்தியாவுக்கு இப்போது மலையாளத்திலும் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் சந்தியாவின் பார்வை மீண்டும் கோலிவுட் படக்கம் திரும்பியுள்ளது. தனது இரண்டாவது ரவுண்டிலாவது பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த சந்தியாவுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. அதன் பிறகு வருகிற வாய்ப்புகளையாவது தக்க வைத்துக்கொண்டு நடிப்போம் என்று முடிவெடுத்து சந்தியா தற்போது நடித்து வரும் படம் ’யா யா’. இந்தப் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்க, அடுத்து ‘சூதாட்டம்’ என்ற படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது சந்தியாவுக்கு! இதில் இயக்குனரும், நடிகருமான தருண் கோபியுடன் ஜோடி சேரந்து நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;