பவன் கல்யாண் படத்தில் விஜய்?

பவன் கல்யாண் படத்தில் விஜய்?

செய்திகள் 4-Oct-2013 2:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தியேட்டருக்கு வருவதற்கு முன்னாடியே இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கு படம் ‘அத்தரிண்டிகி தாரேதி’. பவன் கல்யாண், சமந்தா ஜோடியாக நடித்த இந்தப் படம் இணையத்தில் லீக் ஆன செய்தி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர் படக் குழுவினர்! ஆனால் இப்போது படம் வெளியாகி நல்ல வசூலை செய்து கொண்டிருக்க, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரசாத் இதனை தமிழில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். இது சமபந்தமாக தயாரிப்பாளர் பிரசாத் கூறும்போது, ‘‘அத்தரிண்டிகி தாரேதி’ படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய முடிவு செய்துள்ளேன். இது சமபந்தமாக பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். இதில் நடிக்க விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் எதுவும் முடிவாகவில்லை, பேச்சு வார்த்தையில்தான் இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். விஜய் இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்ததற்கான காரணம், இந்தப் படத்தின் கதை விஜய்க்கு ரொமபவும் பிடித்து போயிருக்கிறதாம். அத்துடன் விஜய் நடித்த தெலுங்கு ரீ-மேக் படங்களான ‘கில்லி’, ‘போக்கிரி’ ஆகியவை வெற்றிப் பெற்ற சென்டிமென்ட்டும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;