25 வருடங்களுக்குப் பிறகு திரையிடப்படும் இந்திய படம்!

25 வருடங்களுக்குப் பிறகு திரையிடப்படும் இந்திய படம்!

செய்திகள் 4-Oct-2013 11:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்தியாவில் தயாராகும் திரைப்படங்களுக்கு இங்கு மட்டுமல்லாமல் பல வெளிநாடுகளிலும் பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது! ஆனால் ஒரு சில வெளிநாடுகளில் இன்னமும் அந்நிய நாட்டு படங்களை திரையிடுவதில்லை. இதற்கு காரணம் அந்நாட்டு கலாச்சாரம், அங்குள்ள உள்நாட்டு அரசியல் பிரச்சனைகள் என பல காரணங்கள் இருந்து வருகிறது. அது மாதிரியான ஒரு நாடாக இருந்து வந்தது எகிப்து! இங்கு கடந்த 25 வருடங்களாக எந்த ஒரு இந்திய மொழிப் படத்தையும் திரையிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது எகிப்து நாட்டு அரசாங்க அதிகாரிகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடத்தி அங்கு இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கான அனுமதியை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அங்கு முதன் முதலாக திரையிடப்பட்டிருக்கும் படம் ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’! கடந்த 2-ஆம் தேதி வெளியான இந்தப் படத்தை ‘யுனைடெட் மோஷன் பிக்சர்ஸ்’ மற்றும் ‘இந்திய தூதரகம்’ இணைந்து வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி வரும் ‘க்ரிஷ் 3’ ஆமீர்கான் நடித்து வரும் ‘தூம் 3’ என பல பாலிவுட் படங்கள் அங்கு ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படங்கள் இந்தியாவில் வெளியாகும் அதே நாளில் அங்கு, அரேபிய மொழி சப்-டைட்டிலுடன் ரிலீசாகவிருக்கிறது. இதனால் நம் நாட்டு படங்களின் வியாபார எல்லை விரிவடைந்து கொண்டிருக்கிறது. இது சினிமா சம்பந்தபட்ட அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஷாருக்கான் சிக்ஸ் பேக் வொர்க் அவுட் - வீடியோ


;