அக்டோபர் 13-ல் பாண்டியநாடு!

அக்டோபர் 13-ல் பாண்டியநாடு!

செய்திகள் 4-Oct-2013 10:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ தயாரித்துள்ள படம் ‘பாண்டிய நாடு’. இந்தப் படத்தில் விஷாலுடன் லடசுமி மேனன் கதாநாயகியாக நடித்திருக்க, சுசீந்திரன் இயக்கியுள்ளார். டி.இமான் இசை அமித்திருக்கும் இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சுசீந்திரன் - விஷால் முதன் முதலாக இணைந்து உருவாக்கியிருக்கும் இப்படம், கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வருகிற 13-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. விஷால் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘பட்டத்துயானை’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையிலும், சுந்தர்ச்.சி. இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலையிலும் விஷாலின் ‘பாண்டிய நாடு’ வருகிற தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து ரசிகர்களுக்கு இனிய விருந்து படைக்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘பூஜை’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர்


;